காடாம்புலியூர், சேத்தியாத்தோப்பு, வேப்பூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம்


காடாம்புலியூர், சேத்தியாத்தோப்பு, வேப்பூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம்
x

பராமரிப்பு பணிகள் காரணமாக காடாம்புலியூர், சேத்தியாத்தோப்பு, வேப்பூர் மற்றும் வளையமாதேவி பகுதியில் இன்று மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

கடலூர்

பண்ருட்டி,

காடாம்புலியூர் பகுதி

பண்ருட்டி அருகே உள்ள கீழக்குப்பம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக மருங்கூர், சொரத்தூர், நடுக்குப்பம், பேர்பெரியான்குப்பம், முத்தாண்டி குப்பம், வல்லம், புலவன்குப்பம், காட்டுக்கூடலூர், காடாம்புலியூர், புறங்கணி, காட்டாண்டிக்குப்பம், அழகப்பசமுத்திரம், மேலிருப்பு, கீழிருப்பு, காட்டுப்பாளையம், ஆத்திரிக்குப்பம், மாம்பட்டு மற்றும் மாருதி நகர், கீழக்கொல்லை துணை மின் நிலைய பகுதிகளான கே.எஸ்.கே. நகர், அண்ணா கிராமம், சீனிவாசா அவென்யூ, காந்திநகர், சக்தி நகர் அசோக் நகர் ராமமூர்த்தி நகர், கீழக்கொல்லை மறுசீரமைப்பு மையம், அருட்பெருஞ்ஜோதி நகர், இந்திரா நகர் வி.புதூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 முதல் பகல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்டவாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பண்ருட்டி செயற்பொறியாளர் டி.வி.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சேத்தியாத்தோப்பு, வளையமாதேவி

அதேபோல் சேத்தியாத்தோப்பு மற்றும் வளையமாதேவி துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக சேத்தியாத்தோப்பு, எறும்பூர், ஒரத்தூர், சோழத்தரம், பாளையங்கோட்டை, கொழை, ராமாபுரம், கானூர், காவாலக்குடி, முடிகண்டநல்லூர், கொண்ட சமுத்திரம், வானமாதேவி, அறந்தாங்கி, சித்தமல்லி, மஞ்சக்கொல்லை, மிராளூர், மருதூர், பு.உடையூர், மதுராந்தகநல்லூர், பரதூர், அயனூர், அக்கரமங்கலம், பண்ணப்பட்டு, சிறுகனூர், சாக்கங்குடி, ஆயிப்பேட்டை, ஆடூர், வடஹரி ராஜபுரம், வளையமாதேவி, முகந்தெரியாங்குப்பம், பெருவரப்பூர், சிறுவரப்பூர், கோட்டி முனை, பெருந்துறை, புத்தூர், சாத்தப்பாடி, விளக்கப்பாடி, அகர ஆலம்பாடி, பு.ஆதனூர், அகரம், தர்மநல்லூர், மும்முடி சோழகன், கத்தாழை உள்ளிட்ட கிராமங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என சிதம்பரம் கோட்ட செயற்பொறியாளர் ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

வேப்பூர்

வேப்பூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக வேப்பூர், கழுதூர், நெசலூர், கீழக்குறிச்சி, பாசார், பூலாம்பாடி, நிராமணி, மாளிகைமேடு, பா.கொத்தனூர், சேப்பாக்கம், நல்லூர், சித்தூர், நகர், வண்ணாத்தூர், சாத்தியம், கண்டப்பங்குறிச்சி, எடையூர், சிறுமங்களம், கொடுக்கூர், பெரம்பலூர், கோமங்கலம், மணவாளநல்லுார், மணலூர், தொரவளூர், பரவளூர், கச்சிபெருமாநத்தம், எருமனூர், முகுந்தநல்லூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என திட்டக்குடி செயற்பொறியாளர் சுகன்யா தெரிவித்துள்ளார்.


Next Story