வேதாரண்யம்-தண்டி இடையே ரெயில் இயக்க வேண்டும்


வேதாரண்யம்-தண்டி இடையே ரெயில் இயக்க வேண்டும்
x
தினத்தந்தி 21 Feb 2023 6:45 PM GMT (Updated: 21 Feb 2023 6:46 PM GMT)

உப்புசத்தியாகிரக போராட்ட வரலாற்றை நினைவுப்படுத்தும் வகையில் வேதாரண்யம்-தண்டி இடையே ரெயில் இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

உப்புசத்தியாகிரக போராட்ட வரலாற்றை நினைவுப்படுத்தும் வகையில் வேதாரண்யம்-தண்டி இடையே ரெயில் இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உப்பு ஏற்றுமதி

ஆங்கிலேயர் காலத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி-கோடியக்கரை இடையே மீட்டர்கேஜ் ெரயில்பாதை இருந்தது. இதில் பயணிகள் ெரயில் மற்றும் சரக்கு ெரயில் போக்குவரத்து நடைபெற்றது. அகஸ்தியன்பள்ளியில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு உப்பு ஏற்றுமதி செய்யப்பட்டது. இது தென்னக ெரயில்வேக்கு அதிக வருவாய் ஈட்டும் வழித்தடமாக இருந்து வந்தது.

மீட்டர்கேஜ் பாதையை அகற்றி விட்டு அகல ெரயில்பாதை அமைக்கும் பணி பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டுள்ளது. இந்த வழிதடத்தில் வரும் ஆகஸ்டு மாதத்தில் பயணிகள் மற்றும் சரக்கு ெரயில் போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

உப்புசத்தியா கிரக போராட்டம்

இந்த நிலையில் ஆங்கிலேயர் ஆட்சியில் உப்பிற்கு பலமடங்கு வரிவிதிக்கப்பட்டது. இங்கிலாந்து, ஏடன், லிவர்பூல் ஆகிய இடங்களில் இருந்து கப்பலில் உப்பை கொண்டுவந்து அதை இந்தியாவில் விற்றனர் இதனை எதிர்த்து காந்தி தண்டியில் நடத்திய உப்புசத்தியா கிரக போராட்டத்தின் மூலம் சுதந்திர போராட்டம் உத்வேகம் எடுத்தது.

இதை தொடர்ந்து வேதாரண்யம் உப்புசத்தியா கிரக போராட்டம் 1930-.ம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலை தினமான ஏப்ரல் 13-ந்தேதி திருச்சியில் தொடங்கி ஏப்ரல் 30-ந் தேதி அகஸ்தியன்பள்ளியில் சர்தார் வேதரத்தினம், ராஜாஜி ஆகியோர் உப்பு அள்ளினர்

வேதாரண்யம்-தண்டி இடையே ரெயில் இயக்க வேண்டும்

சுதந்திர போராட்டத்தில் திருப்புமுனையாக அமைந்த உப்பு சத்தியா கிரக போராட்ட வலராற்றை நினைவுப்படுத்தும் வகையில் குஜராத் மாநிலம் தண்டியில் இருந்து வேதாரண்யத்துக்கு ரெயில் இயக்க வேண்டும்.

இந்த ரெயிலுக்கு சர்தார் வேதரெத்தினம் விரைவு ெரயில் என பெயரிட வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story