சிறை அதிகாரிகளுக்கு பயிற்சி முகாம்


சிறை அதிகாரிகளுக்கு பயிற்சி முகாம்
x

வேலூர் ஆப்காவில் சிறை அதிகாரிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

வேலூர்

வேலூர் தொரப்பாடியில் சிறை மற்றும் சீர்திருத்த பயிலகம் (ஆப்கா) உள்ளது. இங்கு தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்த 31 சிறை அதிகாரிகளுக்கு சிறை நிர்வாகத்தில் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் 5 நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது.

ஆப்கா துணை இயக்குனர் பாஸ்கர் வரவேற்றார். இயக்குனர் சந்திரசேகர் தலைமை வகித்து குத்துவிளக்கு ஏற்றி பயிற்சி முகாமை தொடங்கி வைத்து, பயிற்சிக்கான புத்தகங்களையும் வெளியிட்டார். பேராசிரியர் மதன்ராஜ் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

கவுரவ விருந்தினராக வேலூர் வி.ஐ.டி. பிசினஸ் பள்ளி டீன் கோபால் கலந்துகொண்டு பேசினார். முடிவில் பேராசிரியை பியூலா நன்றி கூறினார். இந்த பயிற்சி முகாமில், சிறை கண்காணிப்பில் ட்ரோன் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துதல் போன்ற தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.


Next Story