அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வகுப்பறை மேலாண்மை குறித்த பயிற்சி


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வகுப்பறை மேலாண்மை குறித்த பயிற்சி
x
தினத்தந்தி 14 Aug 2023 6:45 PM GMT (Updated: 14 Aug 2023 6:45 PM GMT)

கீழ்வேளூர் அருகே அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வகுப்பறை மேலாண்மை குறித்த பயிற்சி

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே குருக்கத்தி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வகுப்பறை மேலாண்மை மற்றும் மாணவர்களின் கற்றலில் பெற்றோரின் ஈடுபாடு குறித்த பயிற்சி நடந்தது. பயிற்சியை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் காமராஜன் தொடங்கி வைத்தார். இதில் கீழ்வேளூர் வட்டார அளவில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான குறுவள பயிற்சி, எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலம் நடைபெறும் வகுப்புகளை எவ்வாறு மேலாண்மை செய்வது மற்றும் மாணவர்களின் கற்றலில் பெற்றோர்கள் எவ்வாறு தங்கள் பங்களிப்பை அளிக்க செய்வது தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியின் நோக்கங்கள் குறித்து மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் ரவிசங்கர் பேசினார். இதில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியில் செந்தில்குமார், சீதா ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.


Next Story