கால்பந்து வீராங்கனைக்கு அஞ்சலி
கால்பந்து வீராங்கனைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
சிவகங்கை
சிங்கம்புணரி,
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கால்பந்து வீராங்கனை மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையொட்டி சிங்கம்புணரி பஸ் நிலையம் முன்பு மாணவி பிரியாவின் உருவ படத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து இரங்கல் கூட்டம் நடைபெற்றது. பா.ஜ.க. சிவகங்கை மாவட்ட துணைத்தலைவர் கண்ணையா தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் இளையராஜா முன்னிலை வகித்தார். இதில், கட்சி பொறுப்பாளர்கள், தொண்டர்கள், விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள் மற்றும் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story