தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
x

வடமேற்கு வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருப்பதால், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி

வடமேற்கு வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருப்பதால், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

காற்றழுத்த தாழ்வுநிலை

வடமேற்கு வங்கக்கடலில் ஒடிசா கடலோர பகுதியை ஒட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதனை தொடர்ந்து கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருப்பதை கப்பல்களுக்கு அறிவிக்கும் வகையில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

பலத்த காற்று

மேலும் தமிழ்நாட்டில் மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள் உள்பட பல மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அதே போன்று குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆகையால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Next Story