Normal
அரிசி மூடைகளுடன் தலைகீழாக கவிழ்ந்த லாரி
ராஜபாளையம் அருகே அரிசி மூடைகளுடன் தலைகீழாக லாரி கவிழ்ந்தது.
விருதுநகர்
ராஜபாளையம்,
ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு ராஜபாளையம் வழியாக லாரியில் அரிசி மூடைகளை ஏற்றி சென்று கொண்டு இருந்தனர். இந்த லாரியை, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த அஜித்குமார் என்பவர் ஓட்டினார். அவருடன் மற்றொரு ஓட்டுனர் திருமூர்த்தி உடனிருந்தார்.ராஜபாளையத்தை அடுத்த தேவதானத்திற்கு முன்பு உள்ள ஒரு வளைவில் திருப்பிய போது டிைரவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, அங்குள்ள வடக்குத்தி அம்மன் கோவில் வளாகத்திற்குள் புகுந்து தலைகீழாக கவிழ்ந்தது.இதில் லாரியில் வந்த டிரைவர் உள்பட 2 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.இந்த விபத்து குறித்து சேத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story