பேயாடி கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டு


பேயாடி கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டு
x

பேயாடி கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

புதுக்கோட்டை

ஆவுடையார்கோவில்:

ஆவுடையார்கோவில் அருகே செங்கானம் ஊராட்சியில் பேயாடிகோட்டையில் திருவேட்டழகிய அய்யனார், பெரிய கருப்பர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் 5 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதையடுத்து கோவில் திருவிழா நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை பகுதியை சேர்ந்த 4 காளைகள் கலந்து கொண்டன. இதில் மாடுபிடி வீரர்கள் 14 பேரும், வடத்தை கிராமமக்களும் பிடித்துக் கொண்டு மைதானத்தை சுற்றி வருவார்கள். அப்போது மாடுபிடி வீரர்கள் மாட்டின் கொம்பை பிடித்தால் வெற்றி என்ற வீரமான விளையாட்டை சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்டு ரசித்தனர். கோவிலில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மேலும் ஆடு, கோழி, மாடு உள்ளிட்டவைகளை நேர்த்திக்கடனாக கோவிலுக்கு காணிக்கையாக செலுத்தினர். இக்கோவிலில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


Next Story