வசந்தகுமார் நினைவு தினம்


வசந்தகுமார் நினைவு தினம்
x

தூத்துக்குடியில் வசந்தகுமார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி பாலவிநாயகர் கோவில் தெருவில் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவரும், ஐ.என்.டி.யு.சி. மாநில பொதுச் செயலாளருமான பெருமாள்சாமி ஏற்பாட்டில் முன்னாள் எம்.பி. வசந்தகுமார் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் முத்துக்குட்டி தலைமை தாங்கினார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டேவிட் பிரபாகரன் அலங்கரித்து வைக்கப்பட்ட வசந்தகுமார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அமைப்புசாரா பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் டி.ஜெயக்கொடி, தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், வர்த்தக பிரிவு நகர தலைவர் ஏ.ஜே.அருள்வளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story