வேதிக் வித்யாஸ்ரம் பள்ளி மாணவர்கள் சாதனை


வேதிக் வித்யாஸ்ரம் பள்ளி மாணவர்கள் சாதனை
x

செஸ் போட்டியில் வேதிக் வித்யாஸ்ரம் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

திருநெல்வேலி

நெல்லையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது. இதில் தச்சநல்லூர் வேதிக் வித்யாஸ்ரம் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். 3-ம் வகுப்பு மாணவர் அபிஜித் ஆதித்தியா, 7-ம் வகுப்பு மாணவி நித்யஸ்ரீ ஆகியோர் முதலிடத்தையும், 4-ம் வகுப்பு மாணவர் விக்னேஷ்வர லிங்கம், 5-ம் வகுப்பு மாணவி தேவதர்ஷினி ஆகியோர் 2-வது இடத்தையும், 6-ம் வகுப்பு மாணவர் ராம்கிஷோர் 4-வது இடத்தையும், 6-ம் வகுப்பு மாணவர் ராஜேஷ், மாணவி தீபிகா ஆகியோர் 5-வது இடத்தையும் பிடித்தனர்.

சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் துரைசாமி, முதல்வர் இனோஷ் சிபி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


Next Story