கார்ப்பரேட்டுகளும், காவிகளும் கூட்டணி அமைத்து நாட்டின் பொருளாதாரத்தை பாழ்படுத்துகின்றனர்- ஈரோட்டில் தி.க. தலைவர் கி.வீரமணி பேட்டி


கார்ப்பரேட்டுகளும், காவிகளும் கூட்டணி அமைத்து நாட்டின் பொருளாதாரத்தை பாழ்படுத்துகின்றனர்- ஈரோட்டில் தி.க. தலைவர் கி.வீரமணி பேட்டி
x

கார்ப்பரேட்டுகளும், காவிகளும் கூட்டணி அமைத்து நாட்டின் பொருளாதாரத்தை பாழ்படுத்துகின்றனர் என ஈரோட்டில் தி.க. தலைவர் கி.வீரமணி கூறினார்.

ஈரோடு

ஈரோடு

கார்ப்பரேட்டுகளும், காவிகளும் கூட்டணி அமைத்து நாட்டின் பொருளாதாரத்தை பாழ்படுத்துகின்றனர் என ஈரோட்டில் தி.க. தலைவர் கி.வீரமணி கூறினார்.

5ஜி அலைக்கற்றை

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேற்று ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

2ஜியை விட இன்றைக்கு 50 மடங்கு அதிகமான 4ஜி என்ற அலைக்கற்றை வந்துள்ளது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கே அது கிடைக்கவில்லை. இந்த நிலையில் 5ஜி அலைக்கற்றை வரப்போகிறது. அது கார்ப்பரேட்டுகளுக்குத்தான் கிடைக்கும். கார்ப்பரேட்டுகளும், காவிகளும் கூட்டணி அமைத்து இந்த நாட்டை பாழ்படுத்துகின்றனர்.

வரிப்பணம்

நடிகர் அல்லது வேறு நபர் கவர்னரை சந்தித்தால் ஆட்ேசபனை இல்லை. ஆனால், சந்தித்த நபர் பேசுகையில் அரசியல் பேசினோம் என்று கூறியுள்ளார். நமது வரிப்பணம் அவருக்கு சம்பளம். அவர் அரசியல் பேசுவதற்காக அல்ல. தமிழக கவர்னா் அரசியல் பேசினார் என்றால், ராஜ்பவன் இப்போது ஆர்.எஸ்.எஸ்.சின் கிளையா என்பது தான் கேள்வி.

தமிழகத்துக்கு வட மாநில பணம் அதிக அளவில் வருகிறது. அந்த பணத்தை வைத்துக்கொண்டு பா.ஜ.வி.னர் கூலி பட்டாளம் போல ஆட்களை சேர்க்கின்றனர். திராவிட முன்னேற்ற கழகத்துக்கும், திராவிட மாடல் ஆட்சிக்கும் எதிராக தேவையற்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை பா.ஜ.க.வினர் வைத்து வருகின்றனர்.

டெல்லியால் அனுப்பப்பட்டுள்ள தமிழக கவர்னர், போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார். வடபுறத்தில் இருக்கிற மாதிரி, இங்கு எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி விட முடியாது. காரணம் இது பெரியார் மண்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story