ஈரோடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது
ஈரோடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது.
ஈரோடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது.
450 டன் காய்கறி
ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் வ.உ.சி. மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. அங்கு 700-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தாளவாடி, ஓசூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், பெங்களூரு, தாராபுரம் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து காய்கறி வரத்தாகிறது. கடந்த சில நாட்களாக காய்கறி வரத்து அதிகமாக இருப்பதால் விலை படிப்படியாக குறைந்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று 450 டன் காய்கறி வரத்து ஏற்பட்டது. கடந்த 2 வாரங்களை காட்டிலும், 3 மடங்கு காய்கறி வரத்து அதிகமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் காய்கறியின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.20 வரை குறைந்துவிட்டது.
தக்காளி
சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனையாகி வந்தது. நேற்று ரூ.10 குறைந்து ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனையானது. ரூ.45-க்கு விற்பனையான கத்தரிக்காய் ரூ.40-க்கும் விற்பனையானது.
இதேபோல் காய்கறி மார்க்கெட்டில் நேற்று விற்பனையான காய்கறியின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-
தக்காளி - ரூ.40, வெண்டைக்காய் - ரூ.30, முள்ளங்கி - ரூ.25, பாகற்காய் - ரூ.40, பீர்க்கங்காய் - ரூ.45, புடலங்காய் - ரூ.25, முருங்கைக்காய் - ரூ.30, சுரைக்காய் - ரூ.15, கருப்பு அவரை - ரூ.70, பட்ட அவரை - ரூ.80, கேரட் - ரூ.70, பீட்ரூட் - ரூ.65, முட்டைகோஸ் - ரூ.25, பீன்ஸ் - ரூ.70, காலிபிளவர் - ரூ.25, உருளைக்கிழங்கு - ரூ.35, பெரிய வெங்காயம் - ரூ.40, பச்சை மிளகாய் - ரூ.55, குடைமிளகாய் - ரூ.70, பழைய இஞ்சி - ரூ.250, புதிய இஞ்சி - ரூ.120.