விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Aug 2023 8:15 PM GMT (Updated: 12 Aug 2023 8:16 PM GMT)

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், பெரியகுளம் வடகரை அம்பேத்கர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், பெரியகுளம் வடகரை அம்பேத்கர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ரபீக் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஆண்டி, நகர செயலாளர் ஜோதி முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல செயலாளர் தமிழ்வாணன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காந்திநகர் பகுதியில் காதல் ஜோடி தற்கொலை சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் மது மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story