அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா


அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா
x

அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது.

ராமநாதபுரம்

சாயல்குடி,

கடலாடி அருகே மங்களம் கிராமத்தில் அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது. கிராம நிர்வாகிகள் தலைமை தாங்கினர். கடந்த ஒரு வார காலமாக அம்மன் அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மங்களம் கிராமத்தில் இருந்து 108 பால்குடம் அபிஷேகம் செய்வதற்காக செல்லியம்மன் கோவிலை வந்த டைந்தது. அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு நேற்று பக்தர்கள் அய்யனார் கருப்பசாமி, தவழும் பிள்ளை, காளியம்மன், பேச்சியம்மன் உருவங்களை வடி வமைத்து சிலம்பாட்டத்துடன் மறவர் கரிசல்குளம் கிராமத் தில் இருந்து கடலாடியில் நகர்வலம் சென்று மங்களம் கிரா மத்தில் உள்ள அய்யனார் கோவில் வந்தடைந்தது. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் சாமியை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story