உடன்குடி யூனியன் அலுவலகத்தில்கிராம ஊராட்சி வளர்ச்சி திட்ட முகாம்


உடன்குடி யூனியன் அலுவலகத்தில்கிராம ஊராட்சி வளர்ச்சி திட்ட முகாம்
x
தினத்தந்தி 28 March 2023 12:15 AM IST (Updated: 28 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடி யூனியன் அலுவலகத்தில்கிராம ஊராட்சி வளர்ச்சி திட்ட முகாம் நடந்தது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடியில் வட்டார அளவிலான கிராம ஊராட்சி வளர்ச்சி திட்ட பயிற்சி முகாம் யூனியன் அலுவலகத்தில் நடந்தது. முகாமிற்கு யூனியன் தலைவர் பாலசிங் தலைமை வகித்து திட்ட விளக்க கையேடுகள் வழங்கினார்.வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜான்சிராணி, பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வட்டார ஊராட்சி வளர்ச்சி திட்டமிடல் குழு உறுப்பினர்கள், வட்டார ஊராட்சிதுறை சார் பணிக்குழு உறுப்பினர்கள், வட்டார ஊராட்சி வட்டார சபை உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது. பயிற்சியினை பாண்டிசெல்வி, ஈஸ்வரி ஆகியோர் நடத்தி திட்ட விளக்க உரையாற்றினர்.இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், பவானி, தொழிலாளர் நலத்துறை உதவிஆய்வாளர் ஜோதி, சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் சேதுபதி, ஆழ்வார், ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்


Next Story