ஆயுர்வேத மசாஜ் மையத்தில் விபசாரம்


ஆயுர்வேத மசாஜ் மையத்தில் விபசாரம்
x

திருச்சி பொன்னகரில் ஆயுர்வேத மசாஜ் மையத்தில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட கொல்கத்தா அழகிகள் உள்பட 3 பேரை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

திருச்சி


திருச்சி பொன்னகரில் ஆயுர்வேத மசாஜ் மையத்தில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட கொல்கத்தா அழகிகள் உள்பட 3 பேரை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

மசாஜ் மையத்தில் விபசாரம்

திருச்சி பொன்னகர் 11-வது குறுக்கு தெருவில் 'குயின் ஆயுர்வேதிக் ஸ்பா சென்டர் ' என்ற பெயரில் ஆயுர்வேத மசாஜ் மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் வெளிமாநில அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், தீவிர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் அந்த மசாஜ் மையத்தில் நேற்று முன்தினம் மதியம் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு 2 கொல்கத்தா அழகிகள், நெல்லையை சேர்ந்த ஒரு இளம் பெண் உள்பட 3 பேரை வைத்து விபசாரம் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

கொல்கத்தா அழகிகள் மீட்பு

இதைத்தொடர்ந்து கொல்கத்தா அழகிகள் உள்பட 3 பேரையும் போலீசார் மீட்டனர். மேலும் அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக, திருச்சி குண்டூர் நடுத்தெருவை சேர்ந்த பயல்விஸ்வாஸ் (வயது 30), பாலக்கரை கீழப்புதூர் 2-வது தெருவை சேர்ந்த அருண்குமார் (30), சையது முஸ்தபா ஆகிய 3 பேர் மீது செசன்சு கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் பயல்விஸ்வாஸ், அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான சைதுமுஸ்தபாவை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரும் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட 2 கொல்கத்தா அழகிகள் உள்பட 3 பேரும் காஜாமலையில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story