இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம்
பரமக்குடியில் இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கத்துக்கான அடிக்கல்லை நவாஸ்கனி எம்.பி. நாட்டினார்.
பரமக்குடி,
பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.20 லட்சத்தில் இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கீழ முஸ்லிம் ஜமாத் சபைத் தலைவர் சாகுல்ஹமீது தலைமை தாங்கினார். செயலாளர் சாதிக் அலி, பொருளாளர் லியாகத் அலிகான் மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் அஜ்மல்கான் வரவேற்றார். நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி உள் விளையாட்டு அரங்கத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
இதில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் வேலுச்சாமி, நகர்மன்றத் தலைவர் சேது கருணாநிதி, நகரச்செயலாளர் ஜீவ ரெத்தினம், காங்கிரஸ் மாநில செயலாளர் ஆனந்தகுமார், நகர்மன்ற உறுப்பினர் அப்துல் மாலிக் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர். உடற்கல்வி ஆசிரியர் அன்வர் ராஜா நன்றி கூறினார்.