கீழ்பவானி பாசன கிளை கால்வாய் நடுவில் முறிந்து விழுந்து கிடக்கும் மரத்தினால் சீரான நீரோட்டம் பாதிக்கப்பட்டு உள்ளது.


கீழ்பவானி பாசன கிளை கால்வாய் நடுவில் முறிந்து விழுந்து கிடக்கும் மரத்தினால் சீரான நீரோட்டம் பாதிக்கப்பட்டு உள்ளது.
x

கீழ்பவானி பாசன கிளை கால்வாய் நடுவில் முறிந்து விழுந்து கிடக்கும் மரத்தினால் சீரான நீரோட்டம் பாதிக்கப்பட்டு உள்ளது.

திருப்பூர்

முத்தூர்

குட்டப்பாளையம் அருகே கீழ்பவானி பாசன கிளை கால்வாய் நடுவில் முறிந்து விழுந்து கிடக்கும் மரத்தினால் சீரான நீரோட்டம் பாதிக்கப்பட்டு உள்ளது.

கீழ்பவானி பாசன பகுதிகள்

திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர், முள்ளிப்புரம், பழையகோட்டை, குட்டப்பாளையம், மருதுறை ஆகிய வருவாய் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மிகவும் பிரதானமாக செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜனவரி, ஆகஸ்ட் மாதங்களில் கால்வாயில் திறந்து விடப்படும் தொடர், முறை தண்ணீர் பயன்படுத்தி நஞ்சை சம்பா நெல், எண்ணெய் வித்து பயிர், தோட்டக்கலை பயிர் மற்றும் காய்கறிகள், கீரை வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நத்தக்காடையூர் அருகே உள்ள பழைய கோட்டை ஊராட்சிக்குட்பட்ட குட்டப்பாளையம், சேமலை வலசு கிராமம் அருகில் செல்லும் கீழ்பவானி பாசன கிளை கால்வாய் பக்கவாட்டு பகுதியில் வேர்கள் வலுவிழந்து காய்ந்த நிலையில் செடி, கொடிகளால் சூழப்பட்டு இருந்த சுமார் 12 ஆண்டுகள் பழமையான ஒரு வேலா மரம் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீசிய பலத்த காற்றின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வேரோடு சாய்ந்து முறிந்து உள்ளே விழுந்து கிடக்கிறது. மேலும் இந்த மரம் கால்வாயின் மேல் செல்லும் மண் சாலையின் குறுக்கே நீண்ட தூரத்திற்கு செடி, கொடிகளுடன் விழுந்து இருசக்கர வாகன போக்குவரத்தில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீரோட்டம் பாதிப்பு

இந்த வேலா மரம் கீழ்பவானி பாசன கிளை கால்வாயில் நடுப்பகுதியில் விழுந்து கிடப்பதால் பவானிசாகர் அணையில் இருந்து தற்போது எண்ணெய் வித்து பயிர்கள் எள், நிலக்கடலை, சூரியகாந்தி ஆகிய சாகுபடிக்கு திறந்து விடப்பட்டு முறை தண்ணீர் தொடர்ந்து கடைமடை பகுதி வரை செல்வதில் தடை, தாமதம் ஏற்பட்டு சீரான நீரோட்டம் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் கிளை கால்வாயில் உள்ளே முறிந்து விழுந்து கிடக்கும் மரத்தினால் விரைவில் கால்வாயில் தொடர்ந்து வரும் முறை தண்ணீர் அப்படியே தேங்கி மேலே எழும்பி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வயல்களில் புகுந்து விடும் அபாயம் உள்ளது.

துரித நடவடிக்கை

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் துரித நடவடிக்கை மேற்கொண்டு சேமலை வலசு கிராமம் அருகில் கீழ்பவானி பாசன கிளை கால்வாயில் உள்ளே செடி, கொடிகளால் சூழப்பட்டு நடுவில் முறிந்து விழுந்து கிடக்கும் வேலா மரத்தை வெட்டி அகற்றி அப்புறப்படுத்தி சீரான நீரோட்டம் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.



Next Story