நாடாளுமன்ற தேர்தலில் இனிப்பான வெற்றியை தருவோம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


நாடாளுமன்ற தேர்தலில் இனிப்பான வெற்றியை தருவோம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 13 April 2024 3:41 AM GMT (Updated: 13 April 2024 8:26 AM GMT)

சகோதரர் ராகுல் காந்தி இனிப்பு வழங்கியது மகிழ்ச்சி அளித்ததாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்தியா கூட்டணி சார்பில் கோவையில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பரப்புரையாற்றினார். முன்னதாக பொதுக்கூட்டத்திற்கு செல்லும் வழியில் காரை நிறுத்திய ராகுல்காந்தி, தானே கடைக்கு சென்று இனிப்பு வாங்கி முதல்-அமைச்சரிடம் வழங்கினார்.

இந்த நிலையில், ராகுல் காந்தி தனக்கு இனிப்பு வழங்கிய வீடியோவை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது;

"அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்! என்னுடைய சகோதரர் ராகுல் காந்தி இனிப்பு வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்திக்கு இந்தியா கூட்டணி இனிப்பான வெற்றியை கொடுக்கும்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story