பாதயாத்திரை குழுவினருக்கு வரவேற்பு


பாதயாத்திரை குழுவினருக்கு வரவேற்பு
x

குத்தாலத்தில், காங்கிரஸ் பாதயாத்திரை குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது

மயிலாடுதுறை

இந்தியா சுதந்திரம் அடைந்து 75-வது பவள விழா ஆண்டையொட்டி மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் எஸ்.ராஜகுமார் எம்.எல்.ஏ. தலைமையில் 5 நாட்கள் பாதயாத்திரை நடைபெற்று வருகிறது. இதில், முன்னாள் மாவட்ட தலைவர் பண்ணை சொக்கலிங்கம், மயிலாடுதுறை நகர தலைவர் ராமானுஜம் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். கடந்த 10-ந் தேதி தொடங்கிய இந்த பாதயாத்திரை நேற்று முன்தினம் குத்தாலத்தை வந்தடைந்தது. குத்தாலம் அருகே சேத்திரபாலபுரத்தில் பாதயாத்திரை குழுவினருக்கு காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் ஜம்புகென்னடி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர், குத்தாலத்தில் உள்ள தியாகி திலகர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு பாதயாத்திரை குழுவினர் அங்கிருந்து புறப்பட்டனர். இந்த யாத்திரை ஞாயிற்றுக்கிழமை சீர்காழியில் நிறைவடையும் என்று தெரிகிறது.
Next Story