'அம்ரித் பாரத் நிலையம்' திட்டத்தின் கீழ் நாகூர் ரெயில் நிலையம் மேம்படுத்தப்படுமா?


அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ் நாகூர் ரெயில் நிலையம் மேம்படுத்தப்படுமா?
x
தினத்தந்தி 11 Aug 2023 7:15 PM GMT (Updated: 11 Aug 2023 7:16 PM GMT)

‘அம்ரித் பாரத் நிலையம்’ திட்டத்தின் கீழ் நாகூர் ரெயில் நிலையம் மேம்படுத்தப்படுமா? என பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.

நாகப்பட்டினம்

'அம்ரித் பாரத் நிலையம்' திட்டத்தின் கீழ் நாகூர் ரெயில் நிலையம் மேம்படுத்தப்படுமா? என பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.

அம்ரித் பாரத் நிலையம்

மத்திய அரசு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள ரெயில் நிலையங்களை மேம்படுத்தும் 'அம்ரித் பாரத் நிலையம்' திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.

எஸ்கலேட்டர் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி, நடைமேடைகள் மேம்படுத்தப்படுத்துதல், இலவச 5ஜி இணைய சேவை, பயணிகள் காத்திருப்பு அறை, கூடுதல் நடைமேடைகள் அமைத்தல், வாகனங்கள் நிறுத்தும் வசதி, கண்காணிப்பு கேமராக்கள், நுழைவு வாயில்களை புதுப்பொலிவு பெறச் செய்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படும்.

பிரதமர் தொடங்கி வைத்தார்

இதற்கான பணிகளை பிரதமர் நரேந்திரமோடி கடந்த வாரம் தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக ரூ.25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் 18 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.

இந்த திட்டத்தின்கீழ் உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா அமைந்துள்ள நாகூர் ரெயில் நிலையத்தையும் மேம்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

மத்திய மந்திரிக்கு கோரிக்கை

இதுகுறித்து நாகூர் தர்கா ஆலோசனைக்குழு தலைவர் செய்யது முகமது கலீபா சாஹிப் மத்திய ரெயில்வே மந்திரிக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில், மத்திய அரசின் ரெயில் நிலைய மேம்பாட்டு திட்டத்தில் முதற்கட்ட பட்டியலில் நாகூர் ரெயில் நிலையம் இடம்பெறவில்லை. மிகவும் தொன்மையான நாகூர் ரெயில்நிலையத்தை மேம்படுத்துதல் மிகவும் அவசியமாகிறது.

இதன் மூலம் பல லட்சகணக்கான மக்கள் பயனடைவார்கள். உலகெங்கிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தினமும் நாகூருக்கு வந்து செல்கின்றனர். எனவே நாகூர் ரெயில் நிலையத்தையும் மத்திய அரசு 'அம்ரித் பாரத் நிலையம்' திட்டத்தின் கீழ் மேம்படுத்த வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.


Next Story