ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ராகுல் காந்தி பிரசாரத்திற்கு வருவாரா? - கே.எஸ்.அழகிரி பதில்


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ராகுல் காந்தி பிரசாரத்திற்கு வருவாரா? - கே.எஸ்.அழகிரி பதில்
x

உலக நாடுகளில் ஏற்படும் குழப்பத்திற்கு மேலாக அ.தி.மு.க.வில் மாபெரும் குழப்பம் நிலவுகிறது என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

கும்பகோணம்,

இந்தியா முழுவதும் ராகுல் காந்தி ஒற்றுமை பயணம் நிறைவடைந்தையொட்டி கும்பகோணம் சந்தனாபுரத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகதமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் மதசார்பற்ற கூட்டணி மிகுந்த ஒற்றுமையுடன் ஈரோட்டில் நடைபெறும் இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெறுவார். உலக நாடுகளில் ஏற்படும் குழப்பத்திற்கு மேலாக அ.தி.மு.க.வில் மாபெரும் குழப்பம் நிலவுகிறது.

இந்த குழப்பத்திற்கு காரணம் பாஜக தான். தமிழகத்திலும் அதிமுகவை பாஜக வீழ்த்தி விடும். அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியது போல் பாஜகவை கவனத்துடன் அணுகுகிறோம். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகாபாரதத்தில் கிருஷ்ண பரமாத்மா தேரை ஒட்டி மாபெரும் வெற்றியை போர்க்களத்தில் கொடுத்த மாதிரி இடைத்தேர்ததிலும் வெற்றியை ஏற்படுத்தி தருவார். தமிழக இடைத்தேர்தலில் ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு வர மாட்டார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story