பாலத்தின் தடுப்புச்சுவர் சீரமைக்கப்படுமா?


பாலத்தின் தடுப்புச்சுவர் சீரமைக்கப்படுமா?
x

பாலத்தின் தடுப்புச்சுவர் சீரமைக்கப்படுமா?

நாகப்பட்டினம்

சிக்கல்:

திருக்கண்ணங்குடி ஓடம் ஆற்று பாலத்தின் தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓடம் போக்கி ஆறு

கீழ்வேளூர் ஒன்றியம் திருக்கண்ணங்குடி ஊராட்சியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். திருக்கண்ணங்குடி-ஆழியூர் மெயின் சாலையில் கீழ்வேளூரில் இருந்து ஓடம் போக்கி ஆறு செல்கிறது. இந்த ஆற்று பாலத்தின் தடுப்புச்சுவர் உடைந்த நிலையில் சேதமடைந்துள்ளது. மேலும் பாலத்தின் தடுப்புச்சுவர் அருகே மேற்கு பகுதியில் செல்லும் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக திருக்கண்ணங்குடி, கீழ்வேளூர் பகுதிகளுக்கு தினமும் பொதுமக்கள், விவசாயிகள், வேலைக்கு செல்பவர்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர்.

சீரமைக்க வேண்டும்

மழை நேரத்திலும், ஆற்றில் தண்ணீர் செல்லும்போதும் அந்த வழியாக செல்பவர்களுக்கு பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மழைநேரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு பாலத்தின் தடுப்புச்சுவர் மேலும் சேதமடையும் நிலை உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த பாலத்தின் தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும். மேலும் தடுப்புச்சுவர் அருகே ஏற்பட்டுள்ள பள்ளத்தையும் சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story