வாழப்பாடியில் நகைக்கடையில் தங்க சங்கிலி திருடிய பெண் கைது 5 மாதங்களுக்கு பிறகு சிக்கினார்


வாழப்பாடியில்   நகைக்கடையில் தங்க சங்கிலி திருடிய பெண் கைது  5 மாதங்களுக்கு பிறகு சிக்கினார்
x

வாழப்பாடியில் நகைக்கடையில் தங்க சங்கிலி திருடிய பெண் 5 மாதங்களுக்கு பிறகு சிக்கினார்.

சேலம்

வாழப்பாடி,

வாழப்பாடியில் கடலூர் பிரதான சாலை கடைவீதியில் ராஜன் என்பவரின் நகைக்கடைக்கு கடந்த ஜூன் மாதம் 3-ந்் தேதி பெண் ஒருவர் நகை வாங்குவது போல் வந்தார். அவர் உரிமையாளரின் கவனத்தை திசை திருப்பி, 3 பவுன் தங்க சங்கிலியை திருடிச்சென்றார்.

இதுகுறித்து கடை உரிமையாளர் ராஜன் கொடுத்த புகாரின் பேரில், வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த நூதன திருட்டில் ஈடுபட்டதாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சாம்பல்பட்டி பகுதியை சேர்ந்த சூரியக்குமாரின் மனைவி அலமேலு (வயது 42) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

இவரிடம் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நகைக்கடைகளில் 2,3 பெண்கள் சேர்ந்து கும்பலாக சென்று நகைக்கடை உரிமையாளர்களின் கவனத்தை திசை திருப்பி நகையை திருடிச்செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story