பெண் உள்பட 4 பேர் கைது
பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற்று தருவதாக மக்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற்று தருவதாக மக்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பண மோசடி
தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தின் வெளிப்புறம் மற்றும் அலுவலக வாயில்களில் சில நபர்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெறுவதற்காக வரும் பொதுமக்களிடம் சான்றிதழ் வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் சரவணகுமாருக்கு புகார்கள் வந்தன.உடனே அவர், பொதுமக்கள் அனைவரும் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் போது உரிய இருக்கை எழுத்தரிடம் குறிப்பு பெற்று மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் தொகை செலுத்தி சான்றிதழ்கள் பெற்றுக் கொள்ளலாம் அறிவுறுத்தியதுடன் மோசடியில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
4 பேர் கைது
மேலும் இது தொடர்பாக தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா வழக்குப்பதிவு செய்து சான்றிதழ் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக தஞ்சை ஆபிரகாம்பண்டிதர் சாலையை சேர்ந்த பிரபு, மானம்புச்சாவடியை சேர்ந்த கலியராஜ், ரெட்டிப்பாளையத்தை சேர்ந்த மாலதி, திருப்பூந்துருத்தியை சேர்ந்த முருகேசன் ஆகிய 4 பேரை கைது செய்தார்.