வாகனம் மோதி பெண் சாவு


வாகனம் மோதி பெண் சாவு
x

தேவதானப்பட்டி அருகே வாகனம் மோதி கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் பலியானார்.

தேனி

தேவதானப்பட்டி அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டி பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னக்காமன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சோலையம்மாள் (42). சின்னக்காமன், தனது மனைவியுடன் ஆண்டிப்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

பெரியகுளம்-வத்தலக்குண்டு சாலையில் காட் ரோடு பிரிவு அருகே பின்னால் வந்த வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தனர். பலத்த காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்ைசக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சோலையம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சின்னக்காமன் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story