நெல்மணிகளை காயவைக்கும் பணி தீவிரம்


நெல்மணிகளை காயவைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 16 Jun 2023 6:45 PM GMT (Updated: 16 Jun 2023 6:45 PM GMT)

நீடாமங்கலம் பகுதியில் கோடையில் அறுவடை செய்த நெல்மணிகளை காயவைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் பகுதியில் கோடையில் அறுவடை செய்த நெல்மணிகளை காயவைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கோடை சாகுபடி

நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்து அறுவடை முடிந்துள்ளது.

அவற்றுள் பெரும்பாலான இடங்களில் தாளடி சாகுபடி செய்துள்ள வயல்களில் 16 ஆயிரத்து 500 ஏக்கரில் சித்தமல்லி, பரப்பனாமேடு, கடம்பூர், கோவில்வெண்ணி, காளாச்சேரி, மேலபூவனூர், பூவனூர், ராயபுரம், ராஜப்பையன் சாவடி, அனுமந்தபுரம், ரிஷியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் மின்மோட்டார் மூலம் நிலத்தடி நீரை பயன்படுத்தி கோடை சாகுபடியை தொடங்கி முன்கூட்டியே சாகுபடி செய்தனர்.

காயவைக்கும் பணி

இந்த நிலையில் விவசாயிகள் தற்போது எந்திரம் மூலம் அறுவடை செய்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் விவசாயிகள் சாகுபடி செய்த நெல் பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராகி வருகிறது.

முன் கூட்டியே அறுவடை செய்த விவசாயிகள் நெல் மணிகளை தற்போது எந்திர அறுவடை செய்து அருகில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு நெல்மணிகள் ஈர பதத்துடன் இருப்பதால் அந்த நெல்லை சாலையில் கொட்டி விவசாய தொழிலாளர்களை வைத்து காயவைத்து விற்பனை செய்கின்றனர்.


Next Story