தண்ணீர் தொட்டியில் மூழ்கி தொழிலாளி பலி


தண்ணீர் தொட்டியில் மூழ்கி தொழிலாளி பலி
x

கேரட் கழுவும் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கி தொழிலாளி பலியானார்.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டி அருகே கேத்தி பாலாடா பகுதியில் கேரட் கழுவும் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த ரஞ்சன் மிஸ்ரா (வயது 33) என்பவர் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு செல்வதாக கூறி சென்றார். இந்தநிலையில் நேற்று கேத்தி பாலாடா பகுதியில் உள்ள கேரட் கழுவும் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் ரஞ்சன் மிஸ்ரா இறந்து கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் கேத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தண்ணீர் தொட்டியில் ரஞ்சன் மிஸ்ரா தவறி விழுந்து மூழ்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story