வழித்தகராறில் கோஷ்டி மோதல்


வழித்தகராறில் கோஷ்டி மோதல்
x

நாட்டறம்பள்ளி அருகே வழித்தகராறில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் குண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 60). இவருக்கும் அதேப் பகுதியை சேர்ந்த தம்பிதுரை (38) என்பவருக்கும் கடந்த 7 வருடமாக வழித் தகராறு இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த 26-ந் தேதி சுப்பிரமணி தனது வீட்டின் அருகே நின்று கொண்டு செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தம்பிதுரைக்கும், சுப்பிரமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதுகுறித்து சுப்பிரமணி மற்றும் தம்பிதுரை ஆகியோர் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார், 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து, கார்த்திகேயன் (22) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story