ஆடு திருடிய வாலிபர் கைது


ஆடு திருடிய வாலிபர் கைது
x

திட்டக்குடி அருகே ஆடு திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கடலூர்

பெண்ணாடம்,

திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சின்னத்துரை மகன் சரவணன் (வயது 22). இவருக்கு சொந்தமான 3 ஆடுகளை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் திட்டக்குடி தெற்கு தெருவை சேர்ந்த செல்வம் மகன் வெங்கடேஷ் (23), அகரம்சிகூர் கிராமத்தை சேர்ந்த வசந்த் என்பது தெரியவந்தது. இதையடுத்து வெங்கடேசை போலீசார் கைது செய்தனர். மேலும் வசந்தை தேடி வருகின்றனர்.


Next Story