Normal
குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் வீணாகும் குடிநீரில் குளித்த வாலிபர்கள்
சுரண்டை அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் வீணாகும் குடிநீரில் வாலிபர்கள் குளித்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரல் ஆகிறது.
தென்காசி
சுரண்டை:
சுரண்டை அருகே உள்ள சேர்ந்தமரம் பஜார் தெருவில் கடந்த 2 நாட்களாக தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. இதுகுறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள், குடிநீர் வீணாகும் இடத்தில் துணி துவைத்து குளித்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் குடிநீர் குழாய் உடைப்பை அதிகாரிகள் உடனடியாக சரிசெய்யுமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story