அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கிறது; ஜி.கே.வாசன் பேட்டி
சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணியுடனான தேர்தல் ஆலோசனை கூட்டம் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தை தொடர்ந்து ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் மாணவர்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 18 வயது நிரம்பிய மாணவர்களின் வாக்கு அ.தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்கு அடித்தளமாக அமையும்.
த.மா.கா. கூட்டணி கட்சிகளுக்கான தேர்தல் களப்பணியை தொடங்கி நடத்தி வருகிறது. வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றியில் த.மா.கா. மிக முக்கிய பங்கு வகிக்கும்.அ.தி.மு.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story