சட்டப்பேரவை தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக-தேமுதிக மீண்டும் பேச்சுவார்த்தை


சட்டப்பேரவை தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக-தேமுதிக மீண்டும் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 6 March 2021 7:43 PM IST (Updated: 6 March 2021 7:45 PM IST)
t-max-icont-min-icon

சட்டப்பேரவை தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக-தேமுதிக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

சென்னை, 

தமிழக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக சென்னையில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக-தேமுதிக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதில் அதிமுக சார்பாக வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோரும், தேமுதிக சார்பில் பார்த்தசாரதி, அக்பர் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

இதன்படி கடந்த சில நாட்களாக இழுபறியில் இருந்த அதிமுக-தேமுதிக தொகுதி பங்கீடு தற்போது கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 15 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா இடமும் அதிமுக கொடுக்க முன் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிமுகவுடன் நடக்கும் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படும் சூழலில், தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தத்தில் விரைவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அதிமுக தலைவர்கள் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story