நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பிரசார சுற்றுப்பயணம் 14-ந்தேதி வரை நடக்கிறது


நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பிரசார சுற்றுப்பயணம் 14-ந்தேதி வரை நடக்கிறது
x
தினத்தந்தி 9 March 2021 3:22 AM IST (Updated: 9 March 2021 3:22 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் ‘விவசாயி' சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர் பிரசார பயணம் மேற்கொள்கிறார்.

சென்னை, 

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் ‘விவசாயி' சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர் பிரசார பயணம் மேற்கொள்கிறார். அதன் விவரம் வருமாறு:-

9-ந்தேதி (இன்று) மாலை 4 மணிக்கு பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், 10-ந்தேதி (நாளை) மாலை 4 மணிக்கு பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு,

11-ந்தேதி காலை 10 மணி முதல் ராணிப்பேட்டை, அரக்கோணம், சோளிங்கர், காட்பாடி, ஆற்காடு, வேலூர், மாலை 4 மணி முதல் அணைக்கட்டு, கீழ்வைத்தியனான் குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்ப்பேட்டை, திருப்பத்தூர்.

12-ந்தேதி காலை 10 மணி முதல் கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி, பாலக்கோடு, பென்னாகரம், மாலை 4 மணி முதல் தர்மபுரி, மேட்டூர், ஓமலூர். இரவு 8 மணிக்கு சேலம் பொதுக்கூட்டம்.

13-ந்தேதி காலை 10 மணி முதல் ஏற்காடு, ஆத்தூர், கெங்கவள்ளி, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, மாலை 4 மணி முதல் உளுந்தூர்ப்பேட்டை, விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திண்டிவனம்.

14-ந்தேதி மாலை 4 மணி முதல் சென்னை மற்றும் திருவொற்றியூர் தொகுதி.

மேற்கண்ட தகவல் நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story