திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன்; அதிமுக தேர்தல் அறிக்கை வில்லன் - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்


திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன்; அதிமுக தேர்தல் அறிக்கை வில்லன் - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்
x
தினத்தந்தி 15 March 2021 9:51 AM GMT (Updated: 15 March 2021 9:51 AM GMT)

தேர்தலையொட்டி திமுகவும் அதிமுகவும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இதில் திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகனாகவும், அதிமுக தேர்தல் அறிக்கை வில்லனாகவும் உள்ளது என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

காட்பாடி,

சட்டப்பேரவைத் தேர்தலில் 12வது முறையாகப் போட்டியிடும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் காட்பாடி பேரவை தொகுதியில் போட்டியிட 10-வது முறையாக இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

அதன் பின்னர் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பன்னிரண்டாவது முறையாகவும், காட்பாடி தொகுதிக்கு பத்தாவது முறையாகவும் போட்டியிடுகிறேன். இத்தனை ஆண்டுக்காலம் போட்டியிடுகிறேன் என்றால் அந்த அளவுக்கு மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்ற அர்த்தம். 

அதிகாரத்தை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டால் மக்கள் தொடர்ந்து தேர்ந்தெடுப்பார்கள் என்பதே இதற்கு உதாரணமாகும்.

தேர்தலையொட்டி திமுகவும் அதிமுகவும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இதில் திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகனாகவும், அதிமுக தேர்தல் அறிக்கை வில்லனாகவும் உள்ளது. எப்போதும் தேர்தலைக் குறைத்து மதிப்பிடுவதில்லை. வழக்கம்போல் இந்தத் தேர்தலிலும் போட்டி கடுமையாகவே இருக்கும். ஆனால் திமுகதான் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story