கட்சி சின்னம் பொறித்த சட்டையுடன் வாக்களித்த உதயநிதி ஸ்டாலின்: அதிமுக தேர்தல் ஆணையத்தில் புகார்
கட்சி சின்னம் பொறித்த சட்டையுடன் உதயநிதி ஸ்டாலின் வாக்கு அளித்ததாக அதிமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து உள்ளது.
சென்னை
திமுக-வின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். இவர் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து திமுக-விற்கு வாக்குசேகரித்தார்.
இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மனைவி துர்கா, மகன் உதயநிதியுடன் வந்து மு.க.ஸ்டாலின் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
அப்போது உதயநிதி உதயசூரியன் பொறித்த சட்டை அணிந்திருந்தார். தேர்தல் விதிமுறைப்படி அவ்வாறு செய்யக்கூடாது. வாக்குச்சாவடிக்கு 200 மீட்டர் தொலைவில்தான் சின்னத்தை பயன்படுத்த வேண்டும்.
இதனால் அதிமுக-வின் பாபு முருகவேல் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
Related Tags :
Next Story