உலக செய்திகள்

ஈரானில் புதிய கச்சா எண்ணெய் கிணறு கண்டுபிடிப்பு + "||" + Discovery of new crude oil well in Iran

ஈரானில் புதிய கச்சா எண்ணெய் கிணறு கண்டுபிடிப்பு

ஈரானில் புதிய கச்சா எண்ணெய் கிணறு கண்டுபிடிப்பு
ஈரானில் 5,300 பேரல்கள் வரை தரக்கூடிய புதிய கச்சா எண்ணெய் கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெஹ்ரான்,

ஈரான் உலகில் அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடுகளின் பட்டியலில் 4 வது இடத்திலும், எரிவாயு ஏற்றுமதியில் 2 வது இடத்திலும் உள்ளது.

ஈரான் அரசாங்கம் தீவிரவாதிகளுக்கு உதவிகள் செய்வதாக கூறி அந்நாட்டுடன் செய்யப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. 

மேலும் அமெரிக்க அரசாங்கம் ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது எனவும் தடை விதித்துள்ளது.

இது பொருளாதார ரீதியாக ஈரானுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், ஈரானில் புதிதாக மிகப்பெரிய கச்சா எண்ணெய் கிணறு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டின் அதிபர் ஹசன் ரவுகானி நேற்று அறிவித்துள்ளார். 

சுமார் 5,300 கோடி பேரல் கச்சா எண்ணெய் தரும் இந்த புதிய எண்ணெய் கிணறு, ஈரானின் தென்மேற்கு பிராந்தியமான குசெஸ்தானில் அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரானில் திருமண விழாவில் 11 பேர் பரிதாப சாவு - 30 பேர் படுகாயம்
ஈரானில் திருமண விழாவில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
2. ஈரான் அணு சக்தி ஒப்பந்தம்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வரும் 18-ந் தேதி கூடி விவாதம்
ஈரான் அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வரும் 18-ந் தேதி கூடி விவாதிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3. ஈரானில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டம் - 208 பேர் கொல்லப்பட்டதாக ‘அம்னெஸ்டி’ தகவல்
ஈரானில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கடந்த மாதம் நடந்த போராட்டத்தில் 208 பேர் கொல்லப்பட்டதாக ‘அம்னெஸ்டி’ தெரிவித்துள்ளது.
4. ஈரானில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மக்கள் போராட்டம் - வன்முறைக்கு ஒருவர் பலி
ஈரானில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் பலியானார்.
5. ஈரானில் பெட்ரோல் விலை திடீர் உயர்வு -நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது
ஈரானில் பெட்ரோல் விலை 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் போராட்டம் வெடித்து உள்ளது.