மே 20: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்


மே 20: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
x
தினத்தந்தி 20 May 2021 1:37 AM GMT (Updated: 20 May 2021 1:51 AM GMT)

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.94.54-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த மார்ச் மாதம் வரை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு இருந்தது. இதன் பின்னர், கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதிக்கு பிறகு அதன் விலை சற்று குறைந்தது. அதைத் தொடர்ந்து கடந்த 4 ஆம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலை சற்று உயர்ந்து வந்தது.

நேற்றைய தினம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.94.54-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.88.34-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.94.54-க்கும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.88.34-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Next Story