ஒடிசாவில் ஆகாஷ் ப்ரைம் ஏவுகணை சோதனை வெற்றி; இலக்கை தாக்கி அழித்தது


ஒடிசாவில் ஆகாஷ் ப்ரைம் ஏவுகணை சோதனை வெற்றி; இலக்கை தாக்கி அழித்தது
x
தினத்தந்தி 27 Sep 2021 3:58 PM GMT (Updated: 27 Sep 2021 4:05 PM GMT)

ஒடிசாவில் ஆகாஷ் ப்ரைம் ஏவுகணை சோதனையில் ஆளில்லா விமானம் ஒன்றை இடைமறித்து, தாக்கி அழித்துள்ளது.


புவனேஸ்வர்,

ஆகாஷ் ப்ரைம் என்ற ஏவுகணையை பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) வடிவமைத்துள்ளது.  ஒடிசாவின் சந்திப்பூரில் இந்த ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

ஆளில்லா விமானங்களை தரையிலிருந்து இலக்காக கொண்டு, தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, ஆளில்லா விமானம் ஒன்றை இடைமறித்து, தாக்கி அழித்துள்ளது.  இதனால், டி.ஆர்.டி.ஓ. அமைப்பிற்கு மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.


Next Story