மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததை நியாயப்படுத்தும் சீனா


மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததை நியாயப்படுத்தும் சீனா
x
தினத்தந்தி 8 Feb 2017 9:08 AM GMT (Updated: 8 Feb 2017 9:08 AM GMT)

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போட்ட சீனா, தனது செயலை நியாயப்படுத்தியுள்ளது.

பெய்ஜிங்,

பதான்கோட் விமான தள தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானில் இருக்கும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி மசூத் அசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி ஐ.நா.வுக்கு இந்தியா கடிதம் எழுதியது. ஆனால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இது தொடர்பான தீர்மானத்துக்கு, வீட்டோ அதிகாரம் கொண்ட சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. தனது நெருங்கிய நட்பு நாடான பாகிஸ்தானை திருப்திபடுத்தும் வகையில் சீனா இவ்வாறு நடந்துகொள்வதாக நம்பப்படுகிறது.

கடைசியாக கடந்த டிசம்பரில் சீனா ஏற்படுத்திய முட்டுக்கட்டைக்கு பிறகு, மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக  அறிவிக்க, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா நேற்று முயற்சி மேற்கொண்டது. ஆனால், இந்தப் பரிந்துரைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து, மீண்டும் நிறுத்தி வைத்தது. சீனாவின் இந்த நடவடிக்கை உலக அரங்கில் அதிருப்தியை கிளப்பியது. இந்த நிலையில், சீனா மீண்டும் தனது செயலை நியாயப்படுத்தியுள்ளது. சீனாவின் வெளியுறவு செய்தி தொடர்பாளர் லூ காங்க் தனது பேட்டியின் போது நியாயப்படுத்தி பேசினார்.

Next Story