பாகிஸ்தானில் மக்கள் நிறைந்த மார்க்கெட் பகுதியில் குண்டுவெடிப்பு 5 பேர் பலி


பாகிஸ்தானில் மக்கள் நிறைந்த மார்க்கெட் பகுதியில் குண்டுவெடிப்பு 5 பேர் பலி
x
தினத்தந்தி 31 March 2017 7:07 AM GMT (Updated: 31 March 2017 8:34 AM GMT)

பாகிஸ்தானின் மக்கள் நிறைந்த மார்க்கெட் பகுதியில் வெடிகுண்டு வெடித்ததில் 5 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் வடமேற்கு பழங்குடியின பகுதியான பராச்சினாரில் மக்கள் நிறைந்த பகுதியான மார்க்கெட்டில் இன்று காலை வெடிகுண்டு வெடித்தது. உள்ளூர் அரசியல்வாதி இக்ராமுல்லா கான் பேசுகையில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர், 40 பேர் காயம் அடைந்து உள்ளனர் என கூறிஉள்ளார். வெடிகுண்டு நடந்த இடத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களில் பெரும்பாலோனர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த வருடம் தொடக்கத்திலும் பராச்சினாரில் காய்கறி மார்க்கெட்டில் குண்டு வெடித்த போது 21 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story