ஈரான்: தடைகளைத் தொடர்ந்து தளர்த்த அதிபர் டிரம்ப் ஒப்புதலா?


ஈரான்: தடைகளைத் தொடர்ந்து தளர்த்த அதிபர் டிரம்ப் ஒப்புதலா?
x
தினத்தந்தி 17 May 2017 9:22 PM GMT (Updated: 17 May 2017 9:22 PM GMT)

ஈரான் மீதான தடைகளை ஒபாமா அரசு தளர்த்தியது. இன்றைய அதிபர் டிரம்ப் இம்முடிவை மறுபரிசீலனை செய்வேன் என்று தேர்தல் பிரச்சாரங்களில் பேசி வந்தார். ஆனால் இப்போது தடைகளை தளர்த்தியதை நீட்டிக்க விரைவில் அனுமதிப்பார் என்று பெயர் சொல்ல விரும்பாத அதிகாரிகள் கூறினர்.

வாஷிங்டன்

இந்த தடைத் தளர்வு இந்த வாரம் முடிவிற்கு வரவுள்ளன. பதவியிலிருந்து விலகுவதற்கு சில நாட்களுக்கு முன்பு அதிபர் ஒபாமா இந்த தடைத் தளர்வுகளை மறுபார்வைக்கு உட்படுத்தினார். தேர்தல் வாக்குறுதிக்கு எதிராக டிரம்ப் இந்த தளர்வுகளை இப்போதைக்கு நீடிக்க முடிவு செய்ததாக தெரிகிறது. இதன் பின்னணியில் ஈரானில் அதிபர் தேர்தல் நடைபெறப்போவதும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அங்கு இப்போதைய மிதவாத அதிபர் ரூஹானி, பழைமைவாத வேட்பாளரை எதிர்த்து வெற்றி பெற போராடி வருகிறார். அதிபர் ஒபாமாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரூஹானியே தடைகளைத் தளர்த்தினார். தடைகளைத் தளர்த்த ஈரான் தனது அணுசக்தி திட்டங்களை வெளிப்படையாக நடத்த ஒப்புக்கொண்டது. 

இதனிடையே நடைபெறவுள்ள தேர்தலில் கடுமையான சவாலை சந்தித்து வருகிறார் ரூஹானி. பழைமைவாத வேட்பாளரான ரைஸ்சிக்கு ஆதரவாக அதிபரும், புரட்சிகர பாதுகாப்பு படை எனப்படும் செல்வாக்குள்ள இராணுவமும் மறைமுகமாக செயல்படுகின்றனர் என்று கருதப்படுகிறது. அதிபர் ரூஹானி புரட்சிகர பாதுகாப்புப்படையை அரசியலில் தலையிடாமல் இருக்குமாறு கண்டித்து பேசியுள்ளார் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது. 

ஈரானிய அரசமைப்புப்படி உயர் அதிகார அமைப்பான மதகுருக்கள் சபையின் தலைமை மதகுருவிடமே இறுதி அதிகாரம் குவிந்துள்ளது. இப்போதைய தலைமை மதகுருவான 77 வயதான காமேனி 1989 ஆம் ஆண்டிலிருந்து தலைமைப் பதவியில் இருந்து வருகிறார். அதிபர் ரூஹானி நான்காண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய வெற்றியுடன் பதவியேற்றார். ஈரானை சர்வதேச தனிமையிலிருந்து விடுவித்தல். பொருளாதார வளர்ச்சி, அதிக தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றை வாக்குறுதிகளாக வழங்கியிருந்தார். ஆனால் இவற்றில் அமெரிக்காவுடனான ஒப்பந்தம் தவிர இதர இரண்டில் போதுமான முன்னேற்றமில்லை என்ற அதிருப்தி பரவலாக காணப்படுகிறது.


Next Story