மான்செஸ்டர் வெடி குண்டு தாக்குதல்: ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்பு


மான்செஸ்டர் வெடி குண்டு தாக்குதல்: ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 23 May 2017 1:19 PM GMT (Updated: 23 May 2017 1:18 PM GMT)

22 பேர் கொல்லப்பட்ட மான்செஸ்டர் வெடி குண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

லண்டன்,

அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி ஏரியனா கிராண்ட்டின் இசை நிகழ்ச்சி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்ததில், அங்கு குழுமியிருந்த 22 பேர் உயிரிழந்ததாக லண்டன் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 23 வயது நபரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், மேற்கண்ட தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. ஆனால் இந்த தகவலை போலீஸ் தரப்பில் இருந்து உறுதி செய்யவில்லை. 

Next Story