ரஷ்யாவின் கடற்படை பலத்தின் முன்னோட்டம்; புடின் அதிரடி


ரஷ்யாவின் கடற்படை பலத்தின் முன்னோட்டம்; புடின் அதிரடி
x
தினத்தந்தி 30 July 2017 3:26 PM GMT (Updated: 2017-07-30T20:56:30+05:30)

தனது கடற்பலத்தை கவர்ச்சிகரமான முறையில் ரஷ்ய அதிபர் முன்னிலையில் அந்நாடு வெளிக்காட்டியது.

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்

பால்டிக் கடல் பகுதியிலிருந்து சிரியா வரை நடந்த அணி வகுப்பு ஒன்றில் இந்த பிரம்மாண்ட அம்சம் இடம் பெற்றது.

முதன் முதலாக நாட்டின் கடற்படை பலத்தை பேரளவில் எடுத்துக்காட்ட இந்த அணிவகுப்பில் 50 ற்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் பங்கேற்றன.  “ கடற்படையானது பாரம்பரியமான பணிகளில் மட்டும் ஈடுபடவில்லை; தீவிரவாதம் மற்றும் கடற்கொள்ளை ஆகியவற்றிற்கும் எதிரான போரில் கணிசமான பங்கை அளிக்கிறது” என்றார் புடின்.

புடின் வருடந்தோறும் மாஸ்கோவில் இரண்டாம் உலகப்போர் வெற்றி தினக் கொண்டாட்டங்களில் தனது படை பலத்தை அணிவகுத்து காட்டும்; அதே போல கடற்படை பலத்தையும் வெளிக்காட்ட புடின் முயல்கிறது. மேலை நாடுகள் உக்ரைன் போன்ற விவகாரங்களில் தலையிடுவதால்  ரஷ்யாவுடனான தங்களது உறவில் தாழ்ந்த நிலையை கடைபிடிக்கின்றன. இதனால் ரஷ்யா தனது படை பலத்தை திரட்டிக்காட்டுகிறது. 

ஆங்காங்கே சிறு அளவிலும் தனது கடற்படை அணி வகுப்பை ரஷ்யா நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆஸாத்திற்கு ஆதரவாக நிறுத்தப்பட்டிருந்த கப்பல்களில் இருந்து விமான தாக்குதல்கள் நடத்தியது. இதை அடுத்து படை அணிவகுப்பையும் நடத்திக் காட்டியுள்ளது. 

சிரியாவின் டார்டுஸ் துறைமுகத்தை மையமாகக் கொண்டு அதன் செல்வாக்கை விரிவுபடுத்த ரஷ்யா அந்நாட்டுடன் 49 வருடகால ஒப்பந்தம் ஒன்றையும் செய்து கொண்டுள்ளது. சிரியாவில் ரஷ்யாவின் தலையீடு ஐஎஸ் மற்றும் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளருடனான போரை திசை மாற்றியது என்பதால் ரஷ்யாவின் செல்வாக்கு அப்பிரதேசத்தில் நீடிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.


Next Story