இந்தியா எச்சரிக்கையான நாடு கிடையாது என அமெரிக்கா சமாதானப்படுத்த முயற்சிக்கிறது - பாகிஸ்தான்


இந்தியா எச்சரிக்கையான நாடு கிடையாது என அமெரிக்கா சமாதானப்படுத்த முயற்சிக்கிறது -  பாகிஸ்தான்
x
தினத்தந்தி 16 Jan 2018 2:24 PM GMT (Updated: 16 Jan 2018 2:24 PM GMT)

இந்தியா எச்சரிக்கையான நாடு கிடையாது என அமெரிக்கா எங்களை சமாதானப்படுத்த முயற்சிக்கிறது என பாகிஸ்தான் கூறிஉள்ளது.#India #Pakistan


இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி குர்ராம் கான், இந்தியா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கையான நாடு கிடையாது என அமெரிக்கா பாகிஸ்தானை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறது., இந்தியாவை நோக்கிய நிலைப்பாட்டை பாகிஸ்தான் மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் அமெரிக்கா கூறுகிறது என தெரிவித்து உள்ளார். அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையிலான தெளிவான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க இது சரியான நேரம் எனவும் குறிப்பிட்டு உள்ள குர்ராம் கான், இருதரப்பு இடையே நிலவும் அனைத்து புரிதலின்மையையும் சரிசெய்துக்கொள்ள அனைத்து விவகாரமும் மேஜையின் மீது தயாராக உள்ளது எனவும் குறிப்பிட்டு உள்ளார்.

பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை கொள்கை மற்றும் உள்நாட்டில் பாதுகாப்பு ஆகிய விவகாரம் தொடர்பாக குர்ராம் கான் தன்னுடைய அறிக்கையை வாசிக்கையில் மேற்கூறிய விபரத்தையும் தெரிவித்து உள்ளார். 

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிக்கிறது என்றும், நிதி உதவி பெறுவதற்காக அமெரிக்காவை ஏமாற்றிவிட்டது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டியதை அடுத்து, பாகிஸ்தானுக்கான நிதி உதவி மற்றும் ராணுவ உதவி ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து பயங்கரவாத இயக்கங்கள் நிதி உதவி பெறுவதற்கு பாகிஸ்தான் தடை விதித்து உள்ளது. உதவிகளை ரத்து செய்தாலும் அமெரிக்கா, பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக ஸ்திரமான நடவடிக்கையை எடுக்கும் என நம்பிக்கையை தெரிவித்து வருகிறது. 

அமெரிக்காவின் அதிரடி இருநாடுகளின் இடையிலான உறவை பெரும் நெருடலுக்கு உள்ளாகி உள்ளது. இந்நிலையில் இந்தியாவின் மீது புகார் சுமத்தும் பணியை தொடங்கி உள்ளது பாகிஸ்தான். எல்லையில் அமைதியின்மையை ஏற்படுத்த துப்பாக்கி சூட்டை நடத்திவிட்டு, பயங்கரவாதிகளையும் ஊடுருவ செய்ய முயற்சி செய்துவிட்டு அமெரிக்காவிடமும் புகார் தெரிவித்து உள்ளது பாகிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story