வடகொரியா மீது 2-வதுகட்ட பொருளாதார தடை உலகுக்கு துரதிருஷ்டவசமாக இருக்கும் அமெரிக்கா எச்சரிக்கை


வடகொரியா மீது 2-வதுகட்ட பொருளாதார தடை உலகுக்கு  துரதிருஷ்டவசமாக இருக்கும் அமெரிக்கா எச்சரிக்கை
x
தினத்தந்தி 26 Feb 2018 6:02 AM GMT (Updated: 26 Feb 2018 6:02 AM GMT)

வடகொரியா மீது இரண்டாம் கட்ட பொருளாதார தடைகள் விதிக்க நேரிடும் எனவும், அது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார். #DonaldTrump

வாஷிங்டன்

கொரிய தீபகற்பத்தில் தென்கொரியாவுக்கு அச்சுறுத்தலாக திகழும் வடகொரியா , அவ்வப்போது அணுகுண்டு, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. ஐ.நா. விதித்த பல்வேறு தடைகளையும் மீறி வடகொரியா செயல்பட்டு வருகிறது. டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர் வடகொரியா செயல்பாட்டிற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தது. எச்சரிக்கையையும் மீறி வடகொரியா செயல்பட்டதால் அந்நாட்டு மீதான பொருளாதார தடைகளை மேலும் வலுப்படுத்த அமெரிக்கா நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து வட கொரியாவின் ஏற்றுமதி நிறுவனங்கள் மீது அமெரிக்க முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான தடைகளை நிறைவேற்றியது. இது, வட கொரியாவுக்கு பொருளாதார ரீதியில் மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்காவுக்கு  ஆஸ்திரேலியா பிரதமர் மால்கம் டர்ன்புல் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இருநாடுகளின் கூட்டுக் கூட்டத்தில் பங்கேற்ற ஜனாதிபதி டிரம்ப், வடகொரியா மீது முதல் முறை விதிக்கப்பட்ட தடை தகுந்த பலனளிக்கவில்லை எனில், இரண்டாம் கட்ட தடைகளை விதிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.ஆனால், இரண்டாம் கட்ட அந்த தடை என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். அது உலகுக்கு மிகவும் மிக மிக துரதிருஷ்டவசமாக இருக்கலாம் எனவும் கூறியுள்ளார். இருந்த போதிலும் அந்த அளவுக்கு நிலைமை மோசமாகது. வட கொரியா மீது விதிக்கப்பட்ட தடைகள் பலனளிக்கும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.


Next Story