ஆப்கானிஸ்தானில் விஷம் கலந்த தண்ணீரை குடித்த 60 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி


ஆப்கானிஸ்தானில்  விஷம் கலந்த தண்ணீரை குடித்த 60 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 2 July 2018 8:06 AM GMT (Updated: 2 July 2018 8:06 AM GMT)

ஆப்கானிஸ்தானில் விஷம் கலந்த தன்ணீரை குடித்த 60 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தான்  கிழக்கு பர்வான் பகுதியில் உள்ள ஜர்பியா பெண்கள் மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பயிலும் மாணவிகள் அருகில் உள்ள கால்வாயில் இருந்து தண்ணீரை குடித்து உள்ளனர்.

குடித்து சிறிது நேரத்தில் சுமார் 100 மாணவிகள் திடீரென மயங்கி விழுந்தனர். ஏதோ அசாம்பாவிதம் ஏற்பட்டதை உணர்ந்த பள்ளி நிர்வாகம் அனைவரையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுபோய் சேர்த்துள்ளனர்.

இதில் 60 மாணவிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குடிநீரை பரிசோதனை செய்த அதிகாரிகள் அதில் கடுமையான விஷம் கலக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து குடிநீரில் விஷம் கலந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மாணவிகள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் பெற்றோர்கள் குவிந்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story