ஸ்கைடைவ் செய்தபடி 102-வது பிறந்தநாளை கொண்டாடிய பாட்டி


ஸ்கைடைவ் செய்தபடி 102-வது பிறந்தநாளை கொண்டாடிய பாட்டி
x
தினத்தந்தி 2 July 2018 10:16 AM GMT (Updated: 2 July 2018 10:16 AM GMT)

இங்கிலாந்தை சேர்ந்த பாட்டி ஒருவர் தனது 102-வது பிறந்தநாளை ஸ்கைடைவ் செய்தபடி கொண்டாடி உள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

லண்டன்,

ஒவ்வொருவரும் தனது பிறந்தநாளை வித்தியாசமாகக் கொண்டாட வேண்டும் என விரும்புவார்கள் தான். அந்த வகையில்  இங்கிலாந்தை சேர்ந்த இவா (வயது 102) இவரது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார். 

பிறந்தநாள் அன்று உள்ளரங்க ஸ்கைடைவ் செய்தபடி பிறந்தநாளை கொண்டாடினார். மணிக்கு 177 கிலோ மீட்டர் காற்றின் மூலம், தரையில் இருந்து இவா மேலே தூக்கப்பட்டார். 

இந்த 102  வது பிறந்தநாளைக் கொண்டாடிய விதம் தனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி என இவா தெரிவித்துள்ளார்.

Next Story