உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 31 July 2018 10:30 PM GMT (Updated: 31 July 2018 7:54 PM GMT)

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் மீது தேசத்துரோக வழக்கு போட்ட அரசு தரப்பு வழக்கு முகமையின் தலைவர் முகமது அக்ரம் ஷேக் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

* பிலிப்பைன்ஸ் நாட்டில் ராணுவ சோதனைச்சாவடியில் நேற்று நின்று கொண்டு இருந்த வேனில் குண்டு வெடித்தது. இதில் 10 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

* மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங்குக்கு சென்று கொண்டு இருந்த எம்.எச்.370 விமானம் மாயமானது. 2014-ம் ஆண்டு மார்ச் 8-ந் தேதி மாயமான இந்த விமானத்தை கண்டுபிடிக்கவே முடியாமல் போய்விட்டது. அதில் பயணித்த 239 பேரும் பலியானதாக கருதப்பட்டது. இந்த விமானம் மாயமானதில், மலேசிய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் நேரிட்ட குளறுபடியும் காரணம் என விசாரணை அறிக்கை கூறுகிறது. இதையடுத்து சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் அசாருதீன் அப்துல் ரகுமான் பதவி விலகி உள்ளார்.

* இந்தோனேசியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உடைய ஜேமாஅன்ஷருத் தவுலா என்ற பயங்கரவாத அமைப்பை தெற்கு ஜகார்த்தா கோர்ட்டு கலைத்து உத்தரவிட்டு இருக்கிறது.

* பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் மீது தேசத்துரோக வழக்கு போட்ட அரசு தரப்பு வழக்கு முகமையின் தலைவர் முகமது அக்ரம் ஷேக் பதவியை ராஜினாமா செய்து விட்டார். அங்கு புதிய அரசு பதவி ஏற்க உள்ள நிலையில் இந்த வழக்கு விசாரணையை தன்னால் தொடர முடியாது என்பதால் பதவி விலகுவதாக அவர் அறிவித்து உள்ளார்.

Next Story