உலக செய்திகள்

பாகிஸ்தானை நடத்த நம்மிடம் போதுமான அளவுக்கு நிதி இல்லை: இம்ரான் கான் + "||" + We have no money to run Pakistan, God has created a crisis to change us: Imran Khan

பாகிஸ்தானை நடத்த நம்மிடம் போதுமான அளவுக்கு நிதி இல்லை: இம்ரான் கான்

பாகிஸ்தானை நடத்த நம்மிடம் போதுமான அளவுக்கு நிதி இல்லை: இம்ரான் கான்
பாகிஸ்தானை நடத்த நம்மிடம் போதுமான அளவுக்கு நிதி இல்லை என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இஸ்லமாபாத், 

பாகிஸ்தானில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற இம்ரான்கான், கூட்டணி கட்சிகளுடன் ஆதரவோடு பிரதமராக பதவியேற்றுள்ளார். பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்றது முதல் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை இம்ரான்கான் மேற்கொண்டுள்ளார். 

இந்த சூழலில், பாகிஸ்தான் அதிகாரிகள் கூட்டத்தில் பேசிய இம்ரான் கான், பாகிஸ்தான் நாட்டை நடத்த நம்மிடம் பணம் இல்லை என்று தெரிவித்தார். இம்ரான்கான் மேலும் பேசுகையில் கூறியதாவது:- “ வளமான திட்டங்களை மேற்கொள்வதற்கு பதிலாக இழப்பு ஏற்படுத்தும் திட்டங்களை முந்தைய அரசாங்கங்கள் செயல்படுத்தின. 

அதேபோல், நாட்டு மக்கள் தொகையில் பெரும்பான்மையானோர் வேலை தேடும் இளைஞர்களாகவே உள்ளனர். கடனில் இருந்து அரசு மீண்டு வருவது அவசியமாகும். 

நம்மையும் நமது நாட்டையும் மாற்ற வேண்டியது அவசியமாகிறது.  நாட்டை நாம் மாற்ற வேண்டும் என்பதற்காக கடவுள் இத்தகைய சூழலை கொடுத்து இருக்கலாம். அரசியல் அழுத்தங்கள் இன்றி அதிகாரிகள் செயல்படுவதை எனது அரசு அனுமதிக்கும்” இவ்வாறு பேசியதாக பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் டான் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் இந்திய பாடலுக்கு மாணவர்கள் நடனம்; பள்ளியின் அங்கீகாரம் ரத்து
பாகிஸ்தானில் இந்திய பாடலுக்கு மாணவர்கள் நடனம் ஆடியதால், பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.
2. உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாது மும்பை கிளப் வலியுறுத்தல்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதுவதை தவிர்க்க வேண்டும் என்று மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் கிளப் வலியுறுத்தியுள்ளது.
3. தீவிரவாத தாக்குதல் : பாகிஸ்தானை தனிமைப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் - அருண்ஜெட்லி
தீவிரவாத தாக்குதலால் பாகிஸ்தானை தனிமைப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என மத்திய மந்திரி அருண்ஜெட்லி கூறி உள்ளார்.
4. காஷ்மீரில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது தாக்குதல்: உலக நாடுகள் கடும் கண்டணம்
காஷ்மீரில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 44 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
5. உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் வரலாறு படைக்கும் முன்னாள் கேப்டன் மொயின்கான் நம்பிக்கை
உலக கோப்பை போட்டியில் நாங்கள் இந்திய அணியை இதுவரை வீழ்த்தியது இல்லை. ஆனால் தற்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வரும் உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி வரலாறு படைக்கும்.